விராட் கோஹ்லிக்கு பிறகு இந்திய அணியில் இவர் தான்: கிறிஸ் கெய்ல் கருத்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோஹ்லிக்கு பிறகு கே.எல்.ராகுல் தான் நீண்ட காலம் சேவை செய்பவராக இருப்பார் என, பஞ்சாப் அணியில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுல் தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க வீரராக களமிறங்கும் அவர், நேற்று நடந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக 56 பந்தில் 79 ஓட்டங்கள் விளாசினார்.

இந்நிலையில் ராகுல் குறித்து சக அணி வீரரான கிறிஸ் கெய்ல் கூறுகையில், ‘கே.எல்.ராகுல் நிச்சயமாக என் மனதில் எழும் ஒரு வீரராக திகழ்கிறார். அதாவது விராட் கோஹ்லி போன்று நிறைய ஆடக்கூடியவர். விராட் கோஹ்லிக்கு பிறகு ராகுல் தான் என்பது என் கருத்து.

நான் இப்படி கூறுகிறேன் என்பதாலும், கோஹ்லிக்கு அடுத்தது என்பதாலும் அவர் அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் தானாக இருக்க வேண்டும், தனக்கு எது சாத்தியமோ அந்தப் பிரதேசத்தில் இருக்க வேண்டும், யாருடனும் போட்டி போடக்கூடாது.

இந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளன. நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கிங்ஸ் லெவனுடன் 2 ஆண்டுகளாக இருந்து வருகிறேன், இது உண்மையில் அபாரமானது. எனக்கு பஞ்சாப் ஸ்டைல் பிடிக்கும். நிறைய பெரிய வீரர்கள், மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிச்சயம் இந்த உரிமைதாரருக்காக சிறப்பாக ஏதாவது செய்வோம் என்று நம்புகிறேன். இங்கிருந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது தான் இப்போதைய குறிக்கோள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்