ஒட்டுமொத்த தமிழ்நாடே செல்லப்பெயரால் அழைப்பது மகிழ்ச்சி: டோனி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

10 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 179 ரன்களை எட்டி இருந்தது.

டோனி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து டெல்லி அணி 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

போட்டி முடிந்த பின்னர் டோனியை பார்த்து ரசிகர்கள் தல என செல்லப்பெயரில் ஆர்ப்பரித்தனர். இதுகுறித்து மகிழ்ச்சியடைந்த டோனி, ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் பெயரைச் சொல்லி அழைக்காமல், `தல' என்றே அழைக்கிறார்கள்.

இது மாதிரியான செல்லப்பெயர் எடுப்பது எப்போதும் ஸ்பெஷல்தான். இது எனக்கு அவர்கள் கொடுத்த மிகப்பெரிய செல்லப்பெயர். இது உண்மையாகவே சிறப்பாக இருக்கிறது. அந்தப் பெயர் சி.எஸ்.கே அணியின் பாடலில் இருக்கும் எனக் கூட நினைத்துப் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்