திரும்பி வந்து மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த டோனி... ஒரே போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி செய்த மின்னல் வேக ஸ்டம்பிங் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டோனி தலைமையிலான சென்னை அணி, இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில் மிரட்டி வருகிறது, முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்றது.

அதுமட்டுமின்றி விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடர்லும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை தான், இந்நிலையில் மும்பை அணிக்கெதிரான போட்டியில் டோனி விளையாடததால் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய டோனி தன்னுடைய அதிரடி ஆட்டம் மற்றும் அற்புதமான மின்னல் வேக இரண்டு ஸ்டம்பிங் மூலம் சென்னை அணிக்கு மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்தார்.

ஒரு போட்டியில் டோனி இல்லாததால் சென்னை அணி தோல்வியை சந்தித்ததற்கும், அவர் வந்தவுடன் சென்னை அணி விளையாடியதற்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.

இதனால் ஒரே போட்டியின் மூலம் மீண்டும் தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ளார் டோனி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்