இம்ரான் தாஹீரை செமையாக கலாய்த்த டோனி... மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தது எப்படி? அவரே கூறிய ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தது எப்படி என்பது குறித்து டோனி கூறியுள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் தனி ஒருவனாக டோனி கடை 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார். அதுமட்டுமின்றி இரண்டு அற்புதமான மின்னல் வேக ஸ்டம்பிங் செய்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு டோனியிடம் ஸ்டம்பிங் எப்படி துல்லியமாக செய்ய முடிகிறது என்று கேட்கப்பட்ட போது, டென்னிஸ் பால் கிரிக்கெட் நான் அதிகம் ஆடியுள்ளேன், அதிலிருந்து வந்த அனுபவம் தான், அதுமட்டுமின்றி கீப்பிங்கின் பேசிக் என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும், தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எந்தளவிற்கு குறைந்த நேரத்தில் உங்களால் ஸ்டம்பிங் செய்ய முடிகிறது என்பது முக்கியம். என்னை பொறுத்த வரை கீப்பிங்கின் பேசிக் தான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

அதன் பின் இம்ரான் தாஹீர் பற்றி கூறுகையில், அவர் விக்கெட் எடுத்தவுடன் நானும், வாட்சனும் உடனே அவரை சென்று வாழ்த்தமாட்டோம். ஏனெனில் அவர் விக்கெட் எடுத்தவுடன் மைதானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓடுவார்.

இதனால் அவர் மீண்டும் வந்த பின்னர் நானும், வாட்சனும் சென்று அவரிடம் நன்றாக பந்து வீசினீர்கள் என்று வாழ்த்துவோம், அதுமட்டுமின்றி அவர் விக்கெட் எடுத்தவுடன் நானும், வாட்சனும் எவ்வளவு தூரம் செல்கிறார் என்பதை பார்ப்போம் என்று சிரித்துக் கொண்டே கூற, அங்கு மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்