ஓய்வு பெறுகிறாரா டோனி? சுரேஷ் ரெய்னா சூசகம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சுரேஷ் ரெய்னா சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் தலைதூக்கியுள்ளது.

ஆனால் சென்னை அணியில் டோனி ஆடாத ஆட்டங்கள் தோல்வியை தழுவியதோடு டோனி இல்லாத சிஎஸ்கே கிங்ஸ் அல்ல என்ற பெயர் எடுத்தது.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, ஒரு அணித்தலைவராக டோனியை இழப்பது விடயம் அல்ல.

ஆனால் ஒரு முக்கிய துடுப்பாட்டக்காரராக அவரை இழப்பதுதான் பெரிதாக உள்ளது. இதனால்தான் ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு எதிரான ஆட்டம் தோல்வி கண்டது என்றார்.

மட்டுமின்றி டோனி கிரீசுக்கு வந்தார் என்றார் எதிரணியினருக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுக்கிறார். அவர் அணியில் இல்லாவிட்டால் அந்த வித்தியாசத்தை நாங்கள் உணர்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்