இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இலங்கை அணியின் பயிற்சியாளர் பெயர் அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இலங்கை ஏ அணியின் பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ராய் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஏ அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணியின் பயிற்சியாளராக ராய் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த தொடரின் அணி மேலாளராக சமிந்தா மெண்டீஸ் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராய் ஏற்கனவே இலங்கை இளைஞர் கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்தவராவார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்