ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியல் வெளியீடு! இலங்கை அணி எந்த இடத்தில்?

Report Print Kabilan in கிரிக்கெட்

புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.சி டி20 தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டில் அணிகள் பெற்ற வெற்றி-தோல்விகளின் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட ஐ.சி.சி டி20 தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பல்வேறு மாற்றங்களுடன் அணிகளின் தரவரிசை அமைந்துள்ளது.

பாகிஸ்தான் அணி 286 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா (262) உள்ளது. இங்கிலாந்து (262), அவுஸ்திரேலியா (261), இந்தியா (260) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

5வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா அணி, 2வது இடத்திற்கு முன்னேறியது. ஆனால், இந்திய அணி 5வது இடத்திற்கு சரிந்துள்ளது. இலங்கை அணி 7வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் அணி 8வது இடத்தையும் பிடித்துள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணி 9வது இடத்தில் உள்ளது. நேபாளம் அணி 14வது இடத்தில் 11வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. நமிபியா 20வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

தரவரிசைப்பட்டியல்
  • பாகிஸ்தான்
  • தென் ஆப்பிரிக்கா
  • இங்கிலாந்து
  • அவுஸ்திரேலியா
  • இந்தியா
  • நியூசிலாந்து
  • ஆப்கானிஸ்தான்
  • இலங்கை
  • மேற்கிந்திய தீவுகள்
  • வங்க தேசம்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்