உலகக்கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் ஜெர்சி வெளியீடு!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பைக்கான இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சியை, இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30ஆம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இலங்கை அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

15 பேர் கொண்ட அணிப்பட்டியலில் ஏஞ்சலோ மேத்யூஸ், மலிங்கா ஆகிய முன்னணி வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். திமுத் கருணரத்னே அணித்தலைவராக செயல்பட உள்ளார்.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இலங்கை வீரர்களின் புது ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்கான ஜெர்சியையும் வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்