ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய அணிகள் எவை? முதலிடத்தில் இலங்கை

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய அணிகளின் பட்டியலில் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது.

தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று துடுப்பாட்ட வீரர்களை ஒரு பந்துவீச்சாளர் அவுட்டாக்கினால் அது ஹாட்ரிக் விக்கெட்கள் எனப்படுகிறது.

இந்த பட்டியலில் இலங்கை அணி 9 முறை ஹாட்ரிக் விக்கெட்களை எதிரணிக்கு எதிராக வீழ்த்தியுள்ளது.

அந்த அணியின் லசித் மலிங்கா இதுவரை 3 முறை ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

சமீந்தா வாஸ் இரண்டு முறையும், பர்வீஸ் மகரூப், திசாரா பெரேரா, வனிடு ஹசரங்கா, சேஹன் மதுஷன்கா ஆகியோர் தலா ஒருமுறையும் ஹாட்ரிக் விக்கெட்களை இலங்கை அணி சார்பாக வீழ்த்தியுள்ளனர்.

இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் சார்பில் 8 முறை ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் 6 முறை ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers