ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல்-யை விட்டு வெளியேறிய கோஹ்லி படை!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, நேற்று தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.

விருத்திமன் சஹா 20 ஓட்டங்களிலும், கப்தில் 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மனிஷ் பாண்டே 9 ஓட்டங்களில் வெளியேறினார். எனினும், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் அதிரடி காட்டினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் 18 பந்துகளில் 3 சிக்சர்கள் விளாசி 27 ஓட்டங்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் எடுத்தது.

கடைசி வரை களத்தில் இருந்த வில்லியம்சன் 43 பந்துகளில் 4 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் குவித்தார். பெங்களூரு தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

BCCI

பின்னர் பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான கோஹ்லி(16), பார்த்தீவ் படேல்(0) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த டி வில்லியர்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹெட்மையர் மற்றும் குர்கீரத் சிங் மன் இருவரும் அதிரடியில் இறங்கினர். சிக்சர் பவுண்டரிகளாக விளாசிய ஹெட்மையர் 47 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் விளாசினர்.

அவரைத் தொடர்ந்து, குர்கீரத் 48 பந்துகளில் 65 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. ஆனால், 8வது தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணிக்கு அடுத்து சுற்றுக்கான வாய்ப்பு சிக்கலாகிவிட்டது.

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்