ஹைதராபாத் வீரரை மைதானத்தில் சக வீரர்கள் முன்பு கிண்டல் செய்த விராட் கோஹ்லி... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது விக்கெட் எடுத்த பின், அவர் செய்யும் ரியாக்‌ஷனை செய்து கோஹ்லி கிண்டல் செய்த வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் மோதின.

கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி பரிதாப தோல்வியை சந்தித்தது, பெங்களூரு அணி தன்னுடைய கடைசி போட்டியை வெற்றிகரமாக முடித்தது.

ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்ததால், இன்று நடைபெறவிருக்கும் மும்பை-கொல்கத்தா போட்டியில், கொல்கத்தா அணி தோல்வியடைந்தால் மட்டுமே ஹைதராபாத் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோஹ்லி செய்த ரியாக்சன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது விக்கெட் எடுத்தவுடன் எப்படி ரியாக்சன் செய்தார் என்பதை கோஹ்லி போட்டி முடிந்தவுடன் அங்கிருந்த வீரர்கள் மத்தியில் அதே போன்று செய்து காட்ட உடனே வீரர்கள் அனைவரும் சிரித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers