அஸ்வின் அணியிடம் திணறிய டோனி... சதத்தை தவறவிட்ட டுபிளீசிஸ்!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடி வரும் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்துள்ளது.

மொஹாலியில் தொடங்கிய இன்றைய போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாட்டத்தை துவங்கியது.

தொடக்க வீரர் ஷேன் வாட்சன் 7 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா, தொடக்க வீரர் பாப் டு பிளீசிஸுடன் கைகோர்த்து அதிரடியில் மிரட்டினார்.

இவர்களது பார்ட்னர்ஷிப் மூலம் சென்னை அணி 150 ஓட்டங்களை எட்டியது. 38 பந்துகளில் 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சாம் குர்ரன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் கேப்டன் டோனி களமிறங்கினார். வழக்கமாக ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் களமிறங்கும் டோனி சிக்சர்களை பறக்க விட்டு, ரசிகர்களை குஷிபடுத்துவார்.

ஆனால், இன்றைய போட்டியில் டோனி பவுண்டரி கூட அடிக்க முடியாமல் தடுமாறினார். இதற்கிடையில் அரைசதம் கடந்திருந்த டுபிளீசிஸ் 4 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார்.

55 பந்துகளில் 4 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்கள் எடுத்திருந்த அவர், சாம் குர்ரன் பந்துவீச்சில் போல்டானார். சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்கள் குவித்தது.

BCCI

அவுட் ஆகாமல் களத்தில் இருந்த டோனி 12 பந்துகளில் 10 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். பஞ்சாப் அணித்தரப்பில் சாம் குர்ரன் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்