நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம்: தோல்வி குறித்து பேசிய டோனி

Report Print Kabilan in கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் நடைபெற்ற பிளே-ஆப் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தோல்வியுற்றது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை-மும்பை அணிகளுக்கு இடையிலான பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய மும்பை அணி 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இந்நிலையில் மும்பையுடனான தோல்வி குறித்து சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில்,

‘யாராவது ஒருவர் தோற்றுத்தானே ஆக வேண்டும். துடுப்பாட்டம் சரியாக ஆடவில்லை. இப்போது இறுதிப்போட்டிக்கு ‘over the wicket' வழி செல்லாமல் ‘round the wicket' வழியில் செல்ல வேண்டும். நம் பிட்சை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், அதைச் செய்ய தவறிவிட்டோம்.

PTI

துடுப்பாட்டம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கலாம். Top order batting ஆடுவதும் ஆடாததுமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அனுபவத்திற்கு ஏற்றவாறு ஆட வேண்டும். அடுத்த போட்டியில் பார்ப்போம். துரதிர்ஷ்டவசமாக சில கேட்ச்கள் விடப்பட்டன.

ஆனால், நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக வீசியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. இங்கு சுழற்பந்து வீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்களுக்கு கொஞ்சம் தள்ளி பந்துகளை வீச வேண்டும். போதிய ஓட்டங்கள் இல்லாதபோது ஒவ்வொரு பவுண்டரியும் நம்மை காலி செய்து விடும்.

நல்ல தொடக்கத்துக்குப் பிறகே பவுண்டரிகளை கொடுக்க தொடங்கினோம். என்னவென்றால் Top 2 இடங்களில் இருப்பதால் இன்னொரு வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்