உலகக்கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து விலகிய வேகப்பந்துவீச்சாளர்! களமிறங்கும் மாற்று வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

தோள்பட்டை காயம் காரணமாக, உலகக்கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வருகிற 30ஆம் திகதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணிப்பட்டியலை வெளியிட்டன.

அவுஸ்திரேலியா வெளியிட்ட 15 பேர் கொண்ட அணிப்பட்டியலில், வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் இடம்பிடித்திருந்தார். ஆனால், அவர் தோள்பட்டை காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய அணியில் ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணிப்பட்டியலை, ஒவ்வொரு நாடும் இந்த மாதம் 23ஆம் திகதிக்குள் உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகு ஐ.சி.சி-யின் ஒப்புதலுக்குப் பிறகே வீரர்களை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்