எனது நண்பர், சகோதரர் எல்லாமே டோனி தான்! ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி

Report Print Kabilan in கிரிக்கெட்

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா, தனக்கு நண்பர், சகோதரர் என எல்லாமே டோனி தான் என்று நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

நேற்று நடந்த ஐ.பி.எல் பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தியது. எளிய இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 71 ஓட்டங்கள் விளாசினார்.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 13 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். வழக்கமாக கடைசி கட்டத்தில் களமிறங்கும் ஹர்திக் பாண்ட்யா சிக்சர்களை பறக்க விடுவார். அதேபோல் ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவார்.

இந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா 393 ஓட்டங்கள் குவித்துள்ளதுடன், 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 29 சிக்சர்களை விளாசியுள்ளார்.

இந்நிலையில் டோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘என்னுடைய முன்னுதாரணம், எனது நண்பர், எனது சகோதரர், எனது லெஜண்ட் எல்லாமே எம்.எஸ்.டோனி தான்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் டோனியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்