அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள்! மோசமாக கிண்டல் செய்த இங்கிலாந்து ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்
114Shares

இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள், உலகக்கோப்பையில் விளையாட உள்ள அவுஸ்திரேலிய வீரர்களை ஏமாற்றுபவர்கள் என்று கூறி கிண்டல் செய்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் விளையாட உள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய வார்னர், ஸ்மித் ஆகியோர் தடை காலம் முடிந்த நிலையில், உலகக்கோப்பைக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளனர். இது அவுஸ்திரேலிய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் வார்னர் மற்றும் ஸ்மித்தை குறிக்கும் வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் என்று கிண்டல் செய்துள்ளனர்.

‘இங்கிலாந்தின் பார்மி ஆர்மி’ என்ற இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவினர் போட்டி நடக்கும் மைதானங்களுக்கு சென்று, இங்கிலாந்து அணிக்கு ஆரவாரமாக ஆதரவு தருவார்கள்.

இந்த நிலையில் தான் இந்த குழுவினர், அவுஸ்திரேலிய வீரர்களை வெறுப்பேத்தும் விதமாக டி-ஷர்ட் ஒன்றை வடிவமைத்துள்ளனர். அதில் அவுஸ்திரேலிய அணியின் ஜெர்சிக்கு நடுவே ‘CHEATS' (ஏமாற்றுபவர்கள்) என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது தான் என்று கூறப்படுகிறது. அத்துடன் டி-ஷர்ட் அணிந்துகொண்டு மைதானத்திற்கு வரப்போவதாக பார்மி ஆர்மி தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘நாங்கள் எத்தகைய எதிர்ப்பையும் சந்திக்க தயாராகவே இருக்கிறோம், வாங்க பாத்துக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்