3 ரன்கள் ஓடி ஒரு ரன் எடுத்தேன்.. என்னை பார்த்தே சிரிக்க வேண்டியதாயிற்று! சென்னை வீரர் டூபிளிசிஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பாப் டூ பிளீசிஸ், டெல்லிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசியது குறித்து தெரிவித்துள்ளார்.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று நடந்த 2வது பிளே-ஆப் சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாப் டூ பிளீசிஸ் 39 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகள் 50 ஓட்டங்கள் விளாசினார். தொடக்கத்திலேயே வாட்சன் மற்றும் டூ பிளீசிஸ் இருவரில் ஒருவர் ரன்-அவுட் ஆக வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், இந்த ரன்-அவுட் வாய்ப்பை டெல்லி அணி நழுவ விட்டது. இந்நிலையில் டூபிளீசிஸ் போட்டி குறித்து கூறுகையில், ‘கடந்த 5, 6 போட்டிகளாக நாங்கள் சரியாக ஆடவில்லை. பெரிய போட்டியில் வென்றதால் எங்களுக்கு தன்னம்பிக்கை இருந்தது.

அதிலிருந்துதான் வலுவான மனநிலையை பெற்றோம். முந்தைய இரண்டு போட்டிகளை இங்கு பார்த்தபோது பிட்ச் நன்றாக இருந்தது. வீரர்கள் பெரிய ஷாட்களை ஆடினர். அதே போன்ற பிட்சைத்தான் எதிர்பார்த்தோம். ஆனால், பிட்ச் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை.

தொடக்கத்தில் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு ஆடினால், கூட்டணி அமைத்து அதனை பிறகு நீட்டிப்பதே எங்கள் பலமாக இருந்தது. பின்னால் நல்ல துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதால் ரன் ரேட் என்னவாக இருந்தாலும் பிடித்துவிடலாம் என்றே நினைத்தோம்.

ஆ.. அந்த ரன்-அவுட் வாய்ப்பு.. ஆம் ஓடியது என்னவோ ஒரு ரன் தான், ஆனால் நான் 3 ரன் ஓடியதாக நினைக்கிறேன். நான் என்னைப் பார்த்தே சிரிக்க வேண்டியதாயிற்று, காரணம் அது ஒரு மோசமான ரன்னிங்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்