சிக்ஸர் லைனுக்குள் பந்தை பிடித்த தீபக் சஹார்... கடும் கோபமடைந்த டோனியின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் டோனி கோபப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் பலப்பரீட்டை நடத்தின.

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால், போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் டோனி சற்று கோபப்பட்டதை பார்க்க முடிந்தது. டெல்லி அணியின் இன்னிங்ஸின் போது இம்ரான் தாஹிர் வீசிய 17-வது ஓவரின் நான்காவது பந்தை ரிஷப் பண்ட் லாங் ஆப் திசையில் தூக்கி அடித்தார்.

அங்கு பீல்டிங் செய்துகொண்டிருந்த தீபக் சாஹர் அந்த பந்தை கேட்ச் பிடித்துவிட்டார். ஆனால் பவுண்டரி லைன் தூரத்தை கணக்கிட்டு துல்லியமாக பிடிக்கவில்லை. மாறாக கேட்ச்சை பிடித்துவிட்டு பவுண்டரி லைனை மிதித்துவிட்டார்.

எளிதாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச் வாய்ப்பை முக்கியமான நேரத்தில் தீபக் சாஹர் விட்டதால் டோனி செம டென்சன் ஆகிவிட்டார்.

அதுமட்டுமின்றி உடனடியாக நீயேல்லாம் அங்கே நிற்க வேண்டாம், என்று உடனடியாக பீல்டிங் மாற்றம் செய்தார்.

ரிஷப்பை அந்த ஓவரில் வீழ்த்தியிருந்தால் இன்னும் குறைந்த ஸ்கோரில் டெல்லி அணியை சுருட்டியிருக்கலாம்.

ரிஷப் பண்ட் பவர் ஹிட்டர் என்பதால் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடிவிடுவார். அப்படியிருக்கையில், 17-வது ஓவரில் ரிஷப்பை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்து அதை கோட்டைவிட்டால் கோபம் வரத்தானே செய்யும் என்று இணையவாசிகள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே சமயம் அதற்கு பிரதிபலனாக ரிஷப்பின் விக்கெட்டை தீபக் சாஹரே வீழ்த்திவிட்டார். அத்துடன் அந்த கேட்ச்சை விட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படும் அளவிற்கு ரிஷப் ஆடவில்லை.

மேலும் இந்த சீசனில் ஏற்கனவே ஒருமுறை தொடர்ச்சியாக நோ பால் வீசி மிஸ்டர் கூல் டோனியை தீபக் சாஹர் கடுப்பாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்