இன்றைய ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெல்வதற்கு இந்த அணிக்குதான் வாய்ப்புள்ளதாம்: அனில் கும்ப்ளே கணிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் வெற்றி பெற சென்னை அணியை விட, மும்பை அணிக்கே வாய்ப்பு அதிகம் உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

12வது ஐ.பி.எல் சீசனின் இறுதிப்போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு நடக்கிறது. இந்தப் போட்டியில் மூன்று முறை கோப்பைகளை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

எந்த அணி கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இறுதிப்போட்டி சென்னைக்கு மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டுமென்றால், நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சென்னை அணி பந்துவீச்சில் அசத்தி வருகிறது. இது மாறுபட்ட ஆடுகளம். ஆகையால், மும்பை அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்