11 ஆண்டுகளுக்கு முன் டோனி எவ்வளவு விலைக்கு வாங்கப்பட்டார்: வைரலாகும் டுவிட்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

2008 ஆம் ஆண்டு முதல் முதலாக ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனியை எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது என்பது குறித்த விவரம் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ளது.

தல என தமிழக ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டோனிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும், இவர் 11 ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டபோது எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்ற விவரத்தை, ஐ.பி.எல் வீரர்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானவர் ரிச்சர்ட் மேட்லி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

2008-ல் வீரர்கள் ஏலம் விட்டபோது விலை குறித்து வைக்கப்பட்டதை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், மகேந்திர சிங் டோனியை 10 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிஸ் அணி வாங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்