ஒரு ரன்னில் த்ரில் வெற்றி : 20 கோடி பரிசை தட்டிசென்ற மும்பை அணி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
536Shares

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

2-வது இடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 12.5 கோடி வழங்கப்பட்டது.

இந்த இறுதிப்போட்டியில் டோனியின் ஆட்டமிழப்பு பெரிய திருப்பு முனையாக இருந்தது. மலிங்கா வீசிய பந்து ஓவர் த்ரோ ஆன நிலையில் அதனை பயன்படுத்தி டோனி ரன் எடுக்க முயற்சிக்கையில் டோனி க்ரீஸ்ஸின் நுனியில் பேட்டை வைக்கவும், பந்து ஸ்டம்ப்பில் படவும் சரியாக இருந்தது.

இதனால், மூன்றாவது அம்பயர் டோனிக்கு அவுட் கொடுத்தார். டோனியின் ஆட்டமிழப்பு தவறாக வழங்கப்பட்டது, இதுபோன்ற சூழ்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் அம்பயர் முடிவு எடுப்பார், ஆனால் இங்கு ஏமாற்றிவிட்டார்கள் என சென்னை ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

சென்னை அணி டோனி, வாட்சன் ரன் அவுட்களால் தோல்வி அடைந்தது. மலிங்கா ரன்களை வாரிக் கொடுத்து இருந்தாலும், கடைசி ஓவரில் தன் அனுபவத்தைக் காட்டி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்