மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான இரண்டு இலங்கையர்கள்... மஹலே பெருமையுடன் வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அணியின் பயிற்சியாளார் இரண்டு இலங்கை வீரர்களை நினைத்து பெருமையடைகிறோம் என்று குறிப்பிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே மலிங்கா தான், கடந்த முறை மும்பை அணிக்கு பவுலில் பயிற்சியாளராக இருந்துவிட்டு, இந்த முறை ஒரு வீரராக களமிறங்கி, முக்கியமான போட்டியான இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தார்.

இந்நிலையில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளரான ஜெயவர்த்தனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு இலங்கை வீரர்களால் பெருமை அடைகிறோம் என்று மலிங்கா மற்றும் அவர் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers