என் இதயம் நொறுங்கிவிட்டது! தோல்வி குறித்த ஹர்பஜனின் ட்வீட்

Report Print Kabilan in கிரிக்கெட்
345Shares

நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றது என் இதயத்தை நொறுக்கிவிட்டது என சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் தோல்வி குறித்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘நேற்று நடைபெற்ற போட்டியில் தோல்வியுற்றது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்த ஐ.பி.எல் போட்டியில் எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.

நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாராட்டுக்கள். நாம் வெற்றியை எப்படி இழந்தோம் என்பது புரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றொரு ட்விட்டில் அவர் கூறுகையில், ‘தமிழ் மக்கள் மற்றும் சென்னை ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.

மீண்டும் அடுத்த வருடமும் சி.எஸ்.கேவுக்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்