ஐபிஎல் தொடரின் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய இறுதிப் போட்டியின் பரபரப்பான கடைசி ஓவரை எத்தனை பேர் ஹாட் ஸ்டாரில் பார்த்துள்ளனர் என்பது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக சென்னை அணியின் தலைவராக டோனி இருப்பதால், பலரும் சென்னை அணியின் ரசிகர்களாக உள்ளனர்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டி, யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு த்ரில்லாக முடிந்தது.
#IPL2019Final #MIvCSK @ChennaiIPL #Dhoni Man of the match award gos to Umpire, sponsored by Reliance jio!! pic.twitter.com/nFoOWmWlNH
— Ganesh (@Ganesh953333) May 12, 2019
மும்பை அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்படி பரபரப்பான இறுதிப் போட்டியின் கடைசி ஓவரை மட்டும் 16.9 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
ஏனெனில் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அதில் 5 பந்துக்கு 7 ஓட்டங்கள் எடுத்த சென்னை அணி, கடைசி பந்துக்கு 2 ஓட்டங்கள் தேவை என்பதால், அதன் காரணமாகவே ஏராளமானோர் இந்த போட்டியை ஹாட்ஸ்டாரில் தேடி பார்த்துள்ளனர்.