ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் ஷர்மா படைத்த புதிய சாதனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் கோப்பையை 5 முறை முத்தமிட்ட வீரர் என்ற சாதனையை மும்பை அணித்தலைவர் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

ஐ.பி.எல் 12வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

இதில் நான்கு முறையும் மும்பை அணியின் தலைவராக ரோஹித் ஷர்மாவே இருந்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல் கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே அணித்தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அத்துடன், டெக்கான் சார்ஜர்ஸ் அணி கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வென்றபோது(2009) அந்த அணியில் ரோஹித் ஷர்மா இடம்பிடித்திருந்தார். அதன் பின்னரே மும்பை அணியின் தலைவராக 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் செயல்பட்டு கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

எனவே, ஐ.பி.எல் கோப்பையை 5 முறை முத்தமிட்ட ஒரே வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers