ஐபிஎல் விருதுப் பட்டியல்: அதிக ஓட்டங்கள்-விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார்?

Report Print Kabilan in கிரிக்கெட்

12வது ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், பல்வேறு பிரிவுகளில் வீரர்களுக்கும், அணிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

நேற்று 12வது ஐ.பி.எல் சீசன் தொடர் நடந்து முடிந்தது. மும்பை அணி கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவில் பல்வேறு வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்: டேவிட் வார்னர் (692 ஓட்டங்கள்)
அதிவேக அரைசதம் அடித்த வீரர்: ஹர்திக் பாண்ட்யா (34 பந்துகளில் 91 ஓட்டங்கள்)
அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்: இம்ரான் தாஹிர் (26 விக்கெட்டுகள்)
ஆட்டநாயகன் விருது: பும்ரா (இறுதிப்போட்டி)
மதிப்பு மிக்க வீரர் மற்றும் அதிக ஸ்ட்ரைக்ரேட் வீரர்: ஆந்த்ரே ரஸல் (510 ஓட்டங்கள், 204 ஸ்ட்ரைக் ரேட்)
ஸ்டைலிஷ் வீரர்: கே.எல்.ராகுல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி)
2019யில் வளர்ந்து வரும் இளம் வீரர்: சுப்மான் கில் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
சிறந்த மைதானம்: பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானம்
நேர்மையான அணிக்கான விருது: சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
சிறந்த கேட்ச்: கெய்ரன் பொல்லார்டு (மும்பை இந்தியன்ஸ்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers