வெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு வீரராவது அணிக்கு தேவை! விரக்தியில் பேசிய இந்திய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத புஜாரா, வெளிநாடுகளில் நிலைத்து நின்று ஆட ஒரு துடுப்பாட்ட வீரர் தேவை என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மே 30ஆம் திகதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பட்டியலில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் புஜாரா, ரஹானே ஆகியோரில் ஒருவரின் பெயர் கூட இடம்பெறவில்லை.

இவர்களில் புஜாரா 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால், இவர் டெஸ்ட் வீரர் என்றே முத்திரை குத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் இவருக்கு உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக புஜாரா கூறுகையில், ‘வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆட எதிர்நோக்கி காத்திருக்கிறேன், விரைவில் வாய்ப்புகள் வரும் என்றே கருதுகிறேன்.

நான் இதில் மேம்பாடு அடைந்து வருகிறேன், ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகவே இருக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் சீராக ஆடி வரும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களைப் பார்த்தீர்களானால், அவர்கள் ஆடும் விதம் வெறுமனே அடித்து ஆடுவதாக மட்டுமே இருக்காது.

ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வார்கள், இடையிடையே பவுண்டரி அடிப்பார்கள். இப்படித்தான் அணியின் ஸ்கோரை கட்டமைக்கிறார்கள். வெளிநாட்டு பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் ஒரு துடுப்பாட்ட வீரர் நிலைத்து ஒரு முனையில் ஆட வேண்டிய அவசியம், தேவை ஒருநாள் போட்டிகளிலும் உண்டு.

Getty Images

உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது என் கையில் இல்லை. உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தால் அது ஒரு பெருமைக்குரிய கணம் தான். என் ஆட்டத்தை அதற்கேற்ப மாற்றி கொண்டிருக்கிறேன், அணியின் தேவை என்ன எங்கு நான் பொருந்துவேன் என்பதான விடயம் இது.

நம்மிடம் பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா 4வது பந்துவீச்சாளராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் பந்துகள் ஸ்விங் ஆகும். ஆனால் ஒருநாள் போட்டிகளில் பிட்ச் மட்டையாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும். உலகக்கோப்பையில் எதையும் முன் கூட்டியே கணிப்பது கடினம். இங்கிலாந்து சென்ற பிறகு நம்மால் கணிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers