இறுதிப் போட்டியில் ஸ்ரதுல் தாகுரை கடைசி ஓவரில் டோனி அனுப்பியது ஏன்? ஹர்பஜன் சிங் விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தனக்கு முன்னர் ஸ்ரதுல் தாகுரை இறக்கியது ஏன் என்பது குறித்து ஹர்பஜன் சிங் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின, எளிதில் வெற்றி பெற வேண்டிய சென்னை அணி கடைசி கட்டத்தில் ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக கடைசி கட்டத்தில் அனுபவமில்லாத வீரரான ஸ்ரதுல் தாகுரை சென்னை அணி அனுப்பியது, அதே சமயம் ஹர்பஜனை அனுப்பியிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம் என்ற பேச்சும் அடிப்பது.

இந்நிலையில் இது குறித்து ஹர்பஜன் கூறுகையில், ஸ்ரதுல் தகூர் முதல்தர போட்டிகளில் ஒரு சில சதங்கள் அடித்துள்ளார். அந்த தருணத்தில் அவரால் ஒரு சில பவுண்டரிகள் அடிக்க முடியும் என்ற காரணத்திற்காகத் தான் தனக்கு முன்னர் அவரை அனுப்பி வைத்தார் டோனி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்