358 ஓட்டங்கள் குவித்தும் இங்கிலாந்திடம் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி, பிரிஸ்டோலில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பஹார் ஜமான்(2), பாபர் அசாம்(14) ஆகியோர் சொற்ப ஓட்டங்கள் ஆட்டமிழந்தனர். எனினும் ஹரிஸ் சொகைல் 41 ஓட்டங்களும், ஆசிப் அலி 52 ஓட்டங்களும் விளாசினர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் சதமடித்தார். அவரது சதத்தின் மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் குவித்தது.

Getty

AFP

இமாம்-உல்-ஹக் 131 பந்துகளில் ஒரு சிக்சர், 16 பவுண்டரிகளுடன் 151 ஓட்டங்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், டாம் குர்ரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். இதன்மூலம் ஜெட் வேகத்தில் இங்கிலாந்தின் ஸ்கோர் எகிறியது.

இந்த கூட்டணி 17.3 ஓவரில் 159 ஓட்டங்கள் விளாசியது. இந்நிலையில் ஜேசன் ராய் 55 பந்துகளில் 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜோ ரூட்டும் அதிரடி காட்டினார்.

AFP

இதற்கிடையில் சதம் விளாசிய பேர்ஸ்டோ, 93 பந்துகளில் 5 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 128 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்தின் வெற்றிக்கு 8.4 ஓவர்களில் 35 ஓட்டங்களே தேவைப்பட்ட நிலையில், மொயீன் அலி மற்றும் இயான் மோர்கன் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தது.

Tom Jenkins/The Guardian

44.5 ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 359 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொயீன் அலி 46 ஓட்டங்களுடனும், மோர்கன் 17 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

முதல் போட்டி முடிவு கிடைக்காததால், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers