உலகக்கோப்பையில் எந்த அணியும் எப்படி வேண்டுமானாலும் விளையாடும்! எச்சரிக்கும் இந்திய வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கோப்பையில் எந்த அணியும் எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம், எனவே இந்திய அணி கவனமுடன் விளையாட வேண்டும் என இந்திய வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடக்க உள்ள உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜிங்க்யா ரஹானே இடம்பெறவில்லை.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடர் குறித்து ரஹானே கூறுகையில், ‘முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கி, அதனை அடுத்து வரக்கூடிய ஆட்டங்களிலும் இந்தியா வெளிப்படுத்த வேண்டும். காரணம்... உலகக் கோப்பையில் எந்த அணியும், எப்போது வேண்டுமானாலும் பார்முக்கு வரலாம்.

எனவே, ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஆடுவது என்பது மிக முக்கியம். இந்திய அணியில் பந்துவீச்சு அருமையாக இருக்கிறது. உலகக்கோப்பை நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் அவர்கள் விளையாடி இருப்பதால் அங்குள்ள நிலைமை தற்போது நன்றாக தெரியும்.

இந்திய அணி வலுவாக இருக்கிறது. ஆனாலும் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஐ.சி.சி தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடியவை. மேற்கிந்திய தீவுகள் அணியை எப்படி விளையாடும் என்று எப்போதுமே கணிக்க முடியாது. எனவே சிறப்பாக ஆடுவது இந்தியாவுக்கு மிக அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers