அந்த இரண்டு வீரர்களும் எனக்கு பெரிய தலைவலியை கொடுத்தனர்! இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

Report Print Kabilan in கிரிக்கெட்

டேவிட் வார்னர் மற்றும் ஆந்த்ரே ரசல் ஆகிய இருவருக்கும் எப்படி பந்து வீசுவது என்பது தெரியாமல் சிரமப்பட்டதாக, இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் திகதி தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகியுள்ள நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்று தான் உலகக் கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய பந்துவீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை உலகக்கோப்பையில் ஏற்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

AP

இந்நிலையில், இந்திய அணியின் ஸ்விங் பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார், டேவிட் வார்னர் மற்றும் ஆந்த்ரே ரசல் இரண்டு வீரர்களுக்கும் பந்து வீசுவது மிகவும் சிரமமானது என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டேவிட் வார்னர் மற்றும் ரசல் ஆகிய இருவருக்கும் பந்துவீசுவது என்பது எப்போதும் எனக்கு கடினம். அவர்களுக்காக ஒவ்வொரு பந்துவீச்சாளரும் முழு திறமையையும் பயன்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில், டேவிட் வார்னர் 692 ஓட்டங்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதேபோல் ஆந்த்ரே ரசல் அதிரடியில் மிரட்டி, 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ron Gaunt/SPORTSPICS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...