2019 உலகக்கோப்பை பரிசுத்தொகை வெளியானது.. எவ்வளவு தெரியுமா?

Report Print Basu in கிரிக்கெட்

ஐசிசி 2019 ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசுத்தொகை விவரம் வெளியாகியுள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. இதில், அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய பத்து அணிகள் மோதவுள்ளன.

எதிர்வரும் 30ம் திகதி லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியின் பரிசுத்தொகை விவரம் வெளியாகியுள்ளது.

அதன் படி, சாம்பியன் பட்டம் வெல்லும் வின்னர் அணிக்கு 4 மில்லயன் டாலர் பரிசாக அளிக்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடையும் ரன்னர் அணிக்கு 2 மில்லயன் டாலர் வழங்கப்படும்.

அரையிறுதியில் தோல்வியடையும் இரண்டு அணிகளுக்கு தலா 800,000 டாலரும், மொத்தம் 45 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு லீக் ஆட்டத்திலும் வெற்றிப்பெறும் அணிக்கு தலா 40,000 டாலரும், லீக் சுற்றிலிருந்து அடுத்து சுற்றுக்கு முன்னேறும் 6 அணிக்கு தலா 100,000 டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி 2019 ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 10 மில்லயன் டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers