பாகிஸ்தானை புரட்டியெடுத்து தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணி நாட்டிங்காமில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி, நாட்டிங்காமில் நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் பஹார் ஜமான் 50 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த முகமது ஹபீஸ், பாபர் அசாமுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஸ்கோர் 220 ஆக உயர்ந்தபோது, 59 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஹபீஸ் அவுட் ஆனார். பின்னர் ஒருநாள் போட்டிகளில் 9வது சதத்தை எட்டிய பாபர் அசாம் 115 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டாம் குர்ரன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

Getty

அதன் பின்னர் வந்த சோயிப் மாலிக்(41), ஆசிப் அலி(17), சர்பராஸ் அகமது(21) ஆகியோர் அதிரடியாக ஓட்டங்கள் குவிக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 340 ஓட்டங்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் டாம் குர்ரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் பாகிஸ்தானின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். மறுமுனையில் வின்ஸ் 43 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் சதம் விளாசிய ராய், 89 பந்துகளில் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 114 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

AP

ஜோ ரூட் 36 ஓட்டங்களில் அவுட் ஆக, பட்லர் மற்றும் மொயீன் அலி இருவரும் ஓட்டங்கள் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து ஆடினார். டாம் குர்ரன் 31 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதிவரை களத்தில் ஸ்டோக்ஸ் 64 பந்துகளில் 71 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். இங்கிலாந்து அணி 49.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 341 எடுத்து வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்