அணியின் 10 பேரும் டக்-அவுட்.. அனைவரும் போல்டு! கிரிக்கெட்டில் இதுதான் முதல்முறை

Report Print Kabilan in கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரில், காசரகோட் என்ற அணியின் அனைத்து வீராங்கனைகளும் ஓட்டங்கள் எடுக்காமல் போல்டாகினர்.

வடக்கு மண்டல U19 மாவட்டங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரிந்தல்மனாவில் நடந்த போட்டி ஒன்றில் காசரகோட் அணியும், வயநாடு அணியும் மோதின.

முதலில் காசரகோட் அணி விளையாடியது. அந்த அணியின் வீராங்கனைகள் அனைவரும் ஒரு ரன் கூட எடுக்காமல் டக்-அவுட் ஆகி வெளியேறினர்.

களத்தில் இருந்த ஒரு வீராங்கனையும் ரன் ஏதும் எடுக்கவில்லை. அந்த அணியின் இன்னிங்ஸ் 5.5 ஓவரில் முடிந்தது.

அனைவரும் டக்-அவுட் ஆன நிலையில், அந்த அணிக்கு Wide மூலம் 4 ஓட்டங்கள் கிடைத்தது. எனவே எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் ஆடிய வயநாடு முதல் ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கிரிக்கெட்டில் அணியில் அனைவரும் ஓட்டங்கள் எடுக்காமல், போல்டு ஆன சம்பவம் இது தான் முதல்முறை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்