பந்து வருவதற்கு முன் ஸ்டம்பை அடித்த மூத்த பாகிஸ்தான் வீரர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சோயிப் மாலிக், இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் Hit-Wicket ஆன வீடியோ வைரலாகி வருகிறது.

நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து தொடரை இழந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 340 ஓட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் பாபர் அசாம்(115), ஹபீஸ்(59), பஹர் ஜமான்(57) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அனுபவ வீரர் சோயிப் மாலிக் 26 பந்துகளில் 41 ஓட்டங்கள் விளாசினார்.

ஆனால், அவர் அவுட் ஆன விடயம் தான் தற்போது வைரலாகியுள்ளது. 47வது ஓவரில் இங்கிலாந்தின் மார்க் வுட் வீசிய பந்தை, மாலிக் லேட் கட் அடிக்க முடிவு செய்து தனது காலை கிரீஸுக்கு உள்ளே தள்ளி வைத்தார்.

பின் பந்தை கடைசி வரை உள்ளே விட்டு, ஸ்டம்ப் அருகே பந்து வந்தவுடன் அடிக்க முயன்றார். ஆனால் அவர் ஒரேயடியாக காலை ஸ்டம்புக்கு மிக அருகே வைத்ததால், பந்தை அடிக்க வரும்போது மூன்று ஸ்டம்ப்புகளையும் அடித்துவிட்டார்.

முதலில் இந்த விக்கெட்டை பார்த்தபோது போல்டு போல இருந்தது. ஆனால், பின்னர் தான் அது Hit-Wicket என்று பந்துவீச்சாளர் மார்க்வுட்டுக்கு தெரிய வந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து வீரர்கள் இதனைச் சொல்லி சிரித்துக்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் தற்போது மூத்த வீரரான சோயிப் மாலிக், இப்படி மோசமான முறையில் அவுட் ஆனதை ட்விட்டர்வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்