யூகங்களுக்கு முற்றுப்புள்ளி..! கேதர் ஜாதவ் ரிட்டன்ஸ்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் விளையாடுவாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியில் 5ம் திகதி சென்னை-பஞ்சாப் மோதிய போட்டியில் சென்னை வீரர் கேதர் ஜாதவ் பந்தை தடுக்க முயன்றபோது காயமடைந்தார். இதனையடுத்து நடந்த போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், உலககோப்பை இந்திய அணியில் இடம்பிடித்த ஜாதவ், உடற்தகுதி பெறுவாரா, அவருக்கு பதில் யார் அணியில் இடம்பிடிப்பார்கள் போன்ற தகவல்கள் பரவின.

இந்நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் காயத்திலிருந்து குணமடைந்த ஜாதவ், உடற்தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து, உலகக்கோப்பையில் விளையாட விரைவில் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்