ஸ்காட்லாந்து-இலங்கை போட்டி கைவிடப்பட்டது.. சோகத்தில் திமுத்: காரணம் இது தான்

Report Print Basu in கிரிக்கெட்

ஸ்காட்லாந்து-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி. இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது.

ஸ்காட்லாந்து-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி மே 18ம் திகதி எடின்பேர்க் மைதானத்தில் நடைபெறவிருந்தது. தொடர்ந்து மழை பொழிந்து வந்த நிலையில் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

சில மணிநேரங்களுக்கு பின் மழை நின்றவுடன் நடுவர்கள் ஆடுகளத்தை ஆய்வு செய்தனர். இதனையடுத்து, ஒரு பந்து கூட வீசாத நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில், இலங்கை அணித்தலைவராக திமுத் கருணாரத்ன செயல்படவிருந்தார். அவர் அணித்தலைவராக களமிறங்கவிருந்த முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியாக இது அமையவிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் ஒரு நாள் போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையில் 21ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் போட்டியில் திமுத் கருணாரத்ன கனவு நிறைவேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்