20 ஓவரில் 213 அடித்து... இந்தியாவை வீழ்த்தி ஆசியா கோப்பையை வென்றது பாகிஸ்தான்

Report Print Basu in கிரிக்கெட்

நேபாளில் நடந்த வீல்சேர் டி20 ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்.

மே 18 காத்மண்டுவில் நடந்த வீல்சேர் டி20 ஆசியா கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் வீல்சேர் கிரிக்கெட் அணியும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 212 ஓட்டங்களை இலக்காக பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

அபாரமாக துடுப்பாடிய பாகிஸ்தான் வீரர் முகமது லத்தீப் 62 பந்துகளில் 152 ஓட்டங்கள் குவித்து பாகிஸ்தான் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட முகமது லத்தீப் கூறியதாவது, இந்த வெற்றியை நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers