இந்திய நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அதிரடி முடிவு

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை யுவராஜ் சிங் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 சதங்கள், 11 அரைசதங்கள் உள்பட 1900 ரன்கள் சேர்த்துள்ளார். 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதம், 52 அரைசதங்கள் உள்பட 8701 ரன்கள் குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு தொடர்பாக பிசிசிஐ அமைப்பிடம் பேசி வரும் யுவராஜ், பிசிசிஐ ஒப்புதலோடு வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகலில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக விரைவில் பிசிசிஐ அமைப்பிடம் பேசி முடிவு செய்ய உள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடரில் பங்கேற்க யுவராஜ் சிங் ஆர்வமாக இருக்கிறார்.

கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி, அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பமாக இருப்பதால், பிசிசிஐ அனுமதியைக் கோருகிறார். பிசிசிஐ அனுமதி அளித்தால், அவர் ஓய்வுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers