பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரானா 5 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பானதொரு ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் குவித்திருந்தனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாகா ஜோ ரூட் 84 ரன்களும், கேப்டன் மோர்கன் 76 ரன்களும் குவிந்திருந்தனர்.

பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹசன் அலி, முகம்மது ஹஸ்னைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் திணற ஆரம்பித்தது. 46.5 பந்துகளுக்கு 297 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்ஃபாரஸ் அகமது 97 ரன்களும், பாபர் அசாம் 80 ரன்களும் குவித்திருந்தனர்.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத் 2விக்கெட்டுகளையும், டேவிட் வில்லே ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை அணி கைப்பற்றியது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers