டோனியைப் போல் ஸ்டம்பை பார்க்காமல் ரன்-அவுட் செய்த இங்கிலாந்து வீரர்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் ரன்-அவுட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸில் நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 351 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 46.5 ஓவரில் 297 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அவர் 80 ஓட்டங்களில் இருந்தபோது, எதிர்முனையில் ஆடிக்கொண்டிருந்த சர்பராஸ் அகமது ஒரு ரன் ஓட முற்பட்டார்.

ஆனால் விக்கெட் கீப்பர் வேகமாக செயல்பட்டு பந்தை கைப்பற்றியதால், சர்பராஸ் கிரீஸுக்கு திரும்பி விட்டார். ஆனால், மறுமுனையில் பாபர் அஸாம் கிரீசை விட்டு அதிக தூரம் வெளியேறி விட்டு திரும்பினார்.

அப்போது கீப்பர் பட்லர் வீசிய பந்தை, அடில் ரஷித் பிடித்து ஸ்டம்பைப் பார்க்காமலேயே பாபரை அபாரமாக ரன்-அவுட் செய்தார்.

இந்த ரன்-அவுட் டோனி செய்ததைப் போல் இருப்பதாக ஒப்பிட்டு, பலர் சமூக வலைதளங்களில் ரன்-அவுட் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்