உலகக்கோப்பையில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் பட்டியல்.. முதலிடத்தில் இலங்கை ஜாம்பவான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடர்களில் சிறந்து விளங்கிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் 30ஆம் திகதி உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், இதுவரை உலகக்கோப்பையில் சிறந்த விளங்கிய விக்கெட் கீப்பர்கள் குறித்து காண்போம்.

குமார் சங்ககாரா (இலங்கை)

சிறந்த விக்கெட் கீப்பர் பட்டியில் முதலிடத்தில் இருப்பவர், இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா. இவர் இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். அத்துடன் பல சாதனைகளையும் படைத்து, இலங்கை அணிக்கு பெருமை சேர்த்தவர்.

விக்கெட் கீப்பிங்கிலும் சிறந்து விளங்கிய சங்ககாரா, ஒருநாள் போட்டிகளில் 402 கேட்சுகள் மற்றும் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் 37 போட்டிகளில் 41 கேட்சுகள் மற்றும் 13 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா)

சிறந்த விக்கெட் கீப்பர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

நேர்மையான ஆட்டக்காரர் என்ற பெயர் எடுத்த கில்கிறிஸ்ட், அவுஸ்திரேலியா நம்பர் ஒன் அணியாக விளங்கியதற்கு முக்கிய காரணம் ஆவார். உலகக்கோப்பையில் 31 போட்டிகளில் விளையாடி 45 கேட்சுகள் மற்றும் 7 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

எம்.எஸ்.டோனி (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி இந்தப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடியவர் என்ற பெயர் பெற்ற டோனி, அதிரடியாக விளையாடக் கூடிய துடுப்பாட்ட வீரரும் ஆவார்.

உலகக்கோப்பையில் இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 27 கேட்சுகள் மற்றும் 5 ஸ்டம்பிங் செய்துள்ளார். இந்த உலகக்கோப்பையில் விளையாட உள்ள டோனி, மேலும் சில சாதனைகள் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

நியூசிலாந்தின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிரண்டன் மெக்கல்லம், இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அதிரடியாக விளையாடும் துடுப்பாட்ட வீரரான இவர், 34 போட்டிகளில் 30 கேட்சுகள் மற்றும் 2 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

மார்க் பவுச்சர் (தென் ஆப்பிரிக்கா)

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 403 கேட்சுகள் மற்றும் 22 ஸ்டம்பிங் செய்துள்ளார். கடந்த 1999 முதல் 2007 உலகக்கோப்பை வரை விளையாடியுள்ள மார்க் பவுச்சர், 25 உலகக்கோப்பை போட்டிகளில் 31 கேட்சுகள் பிடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்