இந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் இவர்கள் தான்... நம்பிக்கையில் விராட் கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் நம்பிக்கை தூண்கள் யார் என்பது பற்றி இந்திய அணியின் தலைவர் கோஹ்லி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.

இதில் கோப்பையை வெல்லும் அணிகள் பட்டியலில் இந்திய அணியும் உள்ளதால், அந்தணி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த கோஹ்லி, இந்திய அணியின் இரண்டு நம்பிக்கை தூண்கள் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் தான், இவர்களின் பந்து வீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த தொடரில் எந்த ஒரு அணியையும் சாதரணமாக நினைக்க முடியாது, கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் அணி ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இது கடுமையான் சவால் நிறைந்த தொடராக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்