ஐபிஎல்லில் அந்த இந்திய வீரர் தப்பித்துவிட்டார்... ஆனால் உலகக்கோப்பையில்? சபதம் எடுத்த இங்கிலாந்து வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட்டது குறித்து, இந்திய வீரர் ஒருவரைப் பற்றியும் பேசியுள்ளார்.

உலகக்கோப்பை தொடர் விரைவில் துவங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளுமே அதில் கவனம் செலுத்தி வருகின்றன.

குறிப்பாக இந்த முறை சொந்த மண்ணில் நடப்பதால், இங்கிலாந்து அணிக்கு கோப்பை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செயப்பட்டுள்ள, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், இந்த உலகக்கோப்பை போட்டியில் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும்.

அவரை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட வீழ்த்த முடியவில்லை, அதற்கு காரணம் அவர் லெக் ஸ்பின்னர்களிடம் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் உலகக்கோப்பை தொடரில் வைத்து என்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்