உலகக்கோப்பையில் களமிறங்கும் மஹேல ஜெயவர்தன

Report Print Basu in கிரிக்கெட்

எதிர்வரும் 30ம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கவுள்ள உலகக்கேப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன களமிறங்கவுள்ளார்.

இம்முறை உலகக் கோப்பையில் கிரிக்கெட் விளையாட்டின் மகத்துவங்களை உலகிற்கு எடுத்துரைக்க, உலகக் கோப்பை போட்டிகள் வரலாற்றில் முன்னணி நட்சத்திர வீரர்களான 12 முன்னாள் தலைவர்கள் மற்றும் வீரர்களை இம்முறை உலகக் கோப்பை போட்டிகளின் சிறப்பு தூதுவர்களாக நியமிக்க ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன், மேற்கிந்திய தீவுகளின் கிளைவ் லோய்ட் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸும். இந்தியாவின் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அவுஸ்திரேலியாவின் அலென் போடர் மற்றும் ஸ்டீவ் வோ, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜெக் கலீஸ், நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் டேனியல் விட்டோரி, ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான மிர்வைஸ் அஷ்ரப் மற்றும் வங்க தேச அணியின் சகலதுறை வீரரான அப்துர் ரசாக், இங்கிலாந்து சார்பாக கிரேம் ஸ்வான் மற்றும் ஹீதர் நைட்டு ஆகியோர் இம்முறை உலகக் கோப்பை போட்டியில் ஐசிசி-யின் சிறப்பு தூதுவர்களாக செயற்படவுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்