உலகக்கோப்பை முதல் போட்டியிலே மிரள வைத்த ஸ்டோக்ஸ்... அந்தரத்தில் பறந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பறந்து ஒற்றை கையில் பிடித்த கேட்ச் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

சொந்த மண்ணில் விளையாடிய இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் 35-வது ஓவரை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரசீத் வீசினார். அப்போது அதை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்கா வீரர் ஆண்டில் பாம்பிலி லெக் திசையில் அடித்து ஆடினார்.

பந்தானது சிக்ஸரை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த பீல்டர் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக ஒற்றை கையில் தாவி பிடித்தார்.

இந்த கேட்சை பார்த்த போது, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கெதிரான போட்டியின் போது, ரெய்னாவின் கேட்சை பொல்லார்ட் எப்படி பிடித்தாரோ அதே போன்று இருந்தது என்று கூறி, சமூகவலைத்தளங்களில் இரண்டு வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்