இலங்கை அணியின் தலைவரை ஊக்கப்படுத்திய பிரித்தானியா இளவரசர் ஹரி... என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடருக்கான அணிகளின் கேப்டன்களை சந்தித்த போது, இளவரசர் ஹரி அவுஸ்திரேலியா வீரர் பின்சை கிண்டல் செய்தது, இலங்கை வீரரிடம் என்ன சொன்னார் என்பது குறித்தும் தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் நேற்று உலகக்கோப்பை தொடர் கோலகலமாக துவங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த தொடர் துவங்குவதற்கு முன்பு இங்கிலாந்து வந்திருக்கும் அணி கேப்டன்களை ராணி எலிசபெத் சந்தித்து பேசினார். உடன் இளவரசர் ஹரியும் இருந்தார்.

அப்போது ஹரி, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பின்ச்சிடம் இளவரசர் ஹரி, உங்களுக்கு கொஞ்சம் வயதாகி விட்டது போல் தெரிகிறதே? இன்னுமா அணியில் இருக்கிறீர்கள்? எவ்வளவு காலம் தான் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பின்ச் சிரித்தபடியே, 8 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவரிடம், இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு யாருக்கு? என்று ஹரி அவரிடம் திரும்ப கேட்ட போது, சற்று எரிச்சலுடன், இங்கிலாந்து, இந்தியா என்று கூறியபடி சென்றார்.

அதைத் தொடர்ந்து இலங்கை கேப்டன் கருணாரத்னேவிடம், உற்சாகமாக இருங்கள். போட்டியை அனுபவித்து விளையாடுங்கள். இல்லாவிட்டால் இங்கு ஆடியே பிரயோஜனம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்