தோல்விக்கு இவர்கள் தான் காரணம்... மோசமான சாதனை! புலம்பும் பாகிஸ்தான் அணியின் தலைவர்

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடருக்கான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவு அணிகள் மோதின.

அதன் படிம் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, மேற்கிந்திய தீவு அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 105 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவு அணி 13.4 ஓவரிலே 108 ஓட்டங்களை குவித்து அபார வெற்றி பெற்றது.

இதற்கு முன் பாகிஸ்தான் அணி 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 74 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பி 1999-உலகக்கோப்பையில் அவுஸ்திரேலியா அணிக்கெதிராக 132 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை போட்டியில் 105 ஓட்டங்கள் எடுத்து அடுத்து ஒரு மோசமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணமே பேட்ஸ்மேன்கள் தான் என்று பாகிஸ்தான் அணியின் தலைவர சர்பிராஸ் அகமது கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்