இதெல்லாம் ஒரு போட்டியா.. இனிதான் எங்களின் ஆக்ரோஷத்தை பார்க்கப்போகிறீர்கள்! வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் அதிரடி

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தானுடன் விளையாடியது ஒரு போட்டியா, இனி வரும் போட்டிகளில் எங்களின் ஆக்ரோஷமான ஆட்டத்தைப் பாருங்கள் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 21.4 ஓவரில் 105 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

கிறிஸ் கெய்ல் அதிரடியாக 50 ஓட்டங்கள் விளாசினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் ஒரு தரப்பாக அமைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் கூறுகையில்,

‘எங்களைப் பொறுத்தவரை இது ஒரு போட்டியே அல்ல. எங்களின் ஸ்டைல் இப்போது ஆக்ரோஷமாக களத்தில் விளையாடுவது தான். எங்களுக்கு எதிராக எந்த அணி விளையாடினாலும், உச்சபட்சமாக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம். சில நேரங்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்துவோம்.

AFP

இன்றைய நவீன கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸ் முழுவதும் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தாமல், எதிரணியை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது. ஆதலால், தொடக்கத்தில் ஓட்டங்களைக் கொடுத்தாலும், விக்கெட்டுகளை வீழ்த்துவோம். நாங்கள் தொடர்ந்து ஆக்ரோஷமாக இருக்கவே விரும்புகிறோம்.

நாங்கல் மட்டுமல்ல, இந்த தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் எதிரணியின் விக்கெட்டை வீழ்த்த ஆக்ரோஷமாகத்தான் பந்துவீசுகிறார்கள். ஆனால், எந்த மாதிரியான பந்துவீச்சை தெரிவு செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அது சுழற்பந்துவீச்சாக இருக்கலாம். அல்லது வேகப்பந்துவீச்சாக இருக்கலாம். நாம் எவ்வாறு வீசுகிறோம் என்பதுதான் முக்கியம்.

பாகிஸ்தானுக்கு எதிராக எங்கள் வீரர்கள் தாமஸ், ரஸல் இருவரும் நன்றாக பந்துவீசினார்கள். புதிய பந்தில் விரைவாக விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். நாங்கள் வீழ்த்திய விக்கெட்டால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், அதன்பின் மீண்டு எழ முடியவில்லை. கெயில் சூழலுக்கு ஏற்றார்போல் பேட் செய்தார். அவருக்கு பூரனும் நன்கு ஒத்துழைத்தார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்