இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து... 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Report Print Basu in கிரிக்கெட்

உலக்ககோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்தது.

வேல்ஸ் கார்டிப் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் நாணய சுழற்சியல் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் 8வது ஓவரை நியூசிலாந்து வீரர் ஹென்றி பந்து வீச குசால் மெண்டிஸ் துடுப்பாட, துடுப்பில் பட்ட பந்து நேராக பின்னாடி செல்ல ஸ்லிப்-ல் இருந்த மார்டின் குப்தில் பறந்து பந்தை லவகமாக பிடித்தார். இதனையடுத்து, குசால் மெண்டிஸ் பூஜ்ஜியத்துடன் வெளியேறினார்.

29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை 136 ஓட்டங்களில் சுருண்டது. இலங்கை அணியின் ஆரம்ப ஆட்டகாரர்களில் ஒருவரான திரிமன்ன (4), குசால் பெரேரா (29), குசால் மெண்டிஸ் (0), டி சில்வா (4), மேத்யூஸ் (0), ஜீவன் மெண்டிஸ் (1), திசரா பெரேரா (27), உதான (0), லக்மல் (7), மலிங்க (1). இறுதிவரை ஆட்டமிழக்காத ஆரம்ப ஆட்டகாரர் கருணாரட்ன 52 ஓட்டங்கள் எடுத்தார்.

நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 137 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 16 ஓவரிலே வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியசாத்தில் அபார வெற்றிப்பெற்றது.

ஆரம்ப ஆட்டகாரர்களாக களமிறங்கிய குப்தில் (73), மன்ரோ (58) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நியூசிலாந்தின் அபார வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers